மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 14 சந்தேக நபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மாவனல்லை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உப்புல் ராயகருண உத்தரவு பிறப்பித்துள்ளார்.
