குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள
கருத்தடை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வுப்
பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எஸ்.திஸேராவுக்கு குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரதிப்
பணிப்பாளர் சந்தன கெநடத கமுவேவினால் உயிர்
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சீ.ஐ.டி இன்று (09) குருணாகல்
பிரதான நீதிவான் சம்பந ஹேவா வசமிடம் அறிக்கை ஊடாக அறிவித்தது.
இது தொடர்பில் சீ.ஐ. டி பணிப்பாளர் ஊடாக
விசேட விசாரணைகளை முன்னெடுக்க நடவடிககை எடுக்கப்பட்டுள்ளதகா சீ.ஐ.டி சார்பில் ஆஜரான அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகக் கூறப்படும் உதவி பொலிஸ்
அத்தியட்சகர் திஜேரா நீதிவானுக்கு அறிவித்தார்.
வைத்தியர் ஷாபி விவகார வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோத இந்த விடயம்
நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இந்த
விவகாரம் தொடர்பில் சந்தேக நபரான வைத்தியர் ஷாபி சார்பில் நீதிமன்றில் ஆஜரான
ஜனாதிபதி சட்டத்தரணி நவரத்ன பண்டாரவும் விடயங்களை முன்வைத்தார்.
விசாரணையாளர்களுக்கு எந்த வகையிலேனும் அச்சுறுத்தல் விடுப்பதை இலகுவாக எடுத்துக்
கொள்ள முடியாது. இது பாரிய அச்சுறுத்தல். குருணாகல் வைத்தியசாலையின் பிரதி
பணிப்பாளர் சந்தன கெந்தகமுவவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். என்றார்.
இந்நிலையில்
இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து தேவையான நடவடிக்களை
முன்னெடுக்க நீதிவான் ஆலோசனை வழங்கினார்.
