இஸ்லாமிய போதகர் ஸாகீர் நாயக் பொது இடங்களில் உரை நிகழ்த்த
மலேசியா தடை விதித்துள்ளது.
சமீபத்தில், இந்தியாவில்
முஸ்லிம் சிறுபான்மையினரை விட தென்கிழக்கு ஆசிய நாட்டில் இந்துக்களுக்கு “100
மடங்கு அதிக உரிமைகள்” இருப்பதாக ஸாகீர் நாயக் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியது.
ஸாகீர் நாயக்கின் கருத்துக்கள் மலேசியாவில்
முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதை
நோக்கமாகக் கொண்டதாக இருக்கலாம் என்று மலேசிய அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என
கூறப்பட்டது. மேலும் மலேசியாவின் 7 மாநிலங்களில்
அவர் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது சர்ச்சைக்குரிய இஸ்லாமிய
போதகர் ஸாகீர் நாயக்கிற்கு நாட்டில் பொது இடங்களில் நிகழ்த்த மலேசியா தடை
விதித்துள்ளது.
மலாய் மெயில் தகவல் படி, நாடு
முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் படையினருக்கும் இந்த உத்தரவை விவரிக்கும் ஒரு
சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
