Our Feeds


Thursday, September 12, 2019

www.shortnews.lk

சஹ்ரானிடம் ஆயுத பயிற்சி பெற்றதாக கைதுசெய்யப்பட்ட 64 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தவ்ஹீத் ஜமாத் - NTJ இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவில் தேசிய தவ்ஹீத் ஜமாத் - NTJ பயங்கரவாதி ஸஹ்ரானிடம் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 26 ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »