ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து
தூக்கப்படுகிறார் அமைச்சர் கபீர் ஹஷீம் .அந்த இடத்திற்கு அமைச்சர் தயா கமகே
நியமிக்கப்படவுள்ளார்.
அதேபோல் அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம ,ரஞ்சித்
மத்தும பண்டார ஆகியோரும் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பதவிகளில் இருந்து
நீக்கப்படவுள்ளனர்.
அமைச்சர் சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி கட்சியின்
கட்டுக்கோப்பை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் இவ்வாறு நீக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே இவர்கள் மீதான
இந்த நடவடிக்கை எடுக்கப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள்
தெரிவித்தன.
ஏற்கனவே சுஜீவ சேனசிங்க ,அஜித்
பெரேரா ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க
தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதிரடியாக இந்த மூத்த உறுப்பினர்கள் மீதும்
நடவடிக்கை எடுக்க கட்சித் தலைவர் ரணில் தீர்மானித்திருப்பது கட்சியின்
நிறைவேற்றுக் குழு மற்றும் பாராளுமன்றக் குழுவில் அவருக்கு இருக்கும் ஆதரவையே
காட்டுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதற்கிடையில் இன்று மாலை தமிழ் முற்போக்கு கூட்டணியயையும்
நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்திக்கவுள்ள அமைச்சர் சஜித் ,ஜனாதிபதி
தேர்தல் தொடர்பான தனது பக்க கருத்தை வெளியிட்டு வேட்பாளராக களமிறங்க ஆதரவை
கோருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
