இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்கள் அனைவரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி ஒரே மேடைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மார்ச் 12 அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று (01) காலை குறித்த அமைப்பினர் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
