Our Feeds


Thursday, October 24, 2019

www.shortnews.lk

ஹிஸ்புல்லாஹ் பேரம் பேசும் சக்தியாக மாறவிருக்கின்றார் - கிழக்கு தமிழர் ஒன்றியம்

 



கிழக்கு தமிழர் ஒன்றியம் தனது பத்திரிகையாளர் மாநாட்டில் ஹிஸ்புல்லாவின்  இரண்டாவது வாக்கு தெரிவின் மூலம் இந்த நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்ய வைத்திருக்கும் முறைமை மிகச்சிறந்த இராஜதந்திரம் எனவும் நடைமுறைக்கு மிகவும் சாத்தியமானது எனவும் பாராட்டியிருக்கிறார்கள்.

 
தமிழர் தரப்பில் இராஜதந்திர நகர்வை தவறிவிட்டார்கள்.தமிழர்களின் வாக்கையும் மொத்தமாக ஒருவருக்கு வழங்கிவிட்டு அதனை உறுதி செய்ய முடியாமல் நமது உரிமையை இழந்து நிற்கின்றோம்.
 
ஹிஸ்புல்லாவின் முன்னெடுப்பைப் போல் ஒரு தமிழர் முன்வந்து பொது வேட்பாளராக அவரது இரண்டாவது தெரிவை கொண்டு ஒரு ஜனாதிபதியை உருவாக்கி பேரம் பேசும் சக்தியாக மாறி இருக்க வேண்டும்.
 
ஹிஸ்புல்லாஹ் தனது முஸ்லிம் வாக்குகளை கொண்டு ஒரு ஜனாதிபதியை உருவாக்கி பெரும் பேரம் பேசும் சக்தியாக மாற இருக்கிறார்.ஆனால் நமது தமிழ் தலைவர்கள் பஸ்ஸை விட்டு விட்டு பின்னால் ஓடுகிறார்கள்.தமிழ் மக்களோ அப்பாவிகளாகவே இருக்கின்றார்கள்.
 
இம்முறை தேர்தலில் எவருமே 50மூ மேல் வாக்கு எடுப்பது சாத்தியமில்லை.ஹிஸ்புல்லாஹ் கூறுவது போன்று அவருக்கு முஸ்லிம் மக்கள் வழங்கும் வாக்குகள் மூலம் நாட்டின் ஜனாதிபதி உருவாகுவது பெரும்பாலும் நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் இப்பொழுது தென்படத்தொடங்கி இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »