Our Feeds


Thursday, October 3, 2019

www.shortnews.lk

சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவரும் இந்நாட்டில் சமமாக மதிக்கப்பட வேண்டும் - அனுரகுமார திசானாயக

 




இனவாதமே நாட்டின் அரசியலாக மாறியுள்ளதாக குறிப்பிட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமாகிய அனுரகுமார திசாநாயக்க, இனவாதத்தை இல்லாதொழிக்கும் தமது பாதையில் அனைவரைம் பயணிக்குமாறும் யாழில் வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

´வீழ்ச்சியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவோம் நாம்´ எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ். ரிம்பர் மண்டபத்தில் நேற்று (02) நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ´´வடக்கில் பாரிய மக்கள் தொகை இருக்கின்றனர். அவர்கள் தங்கள் தங்கள் செயற்பாடுகளைச் செய்வதற்கு போதிய வசதிகளோ நிலைமைகளோ இல்லை. இங்கிருந்ததும் இருக்கின்றதுமான நிலைமைகளை அரசியல்வாதிகள் தமக்காகப் பயன்படுத்தப் பார்க்கின்றனர்.

இது தான் இங்கு பல காலமாக நடந்த வருகின்றது. கடந்த காலங்களில் அதாவது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் இங்கு தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் என்னவெல்லாம் செய்தார்கள் என்று நினைத்தப் பார்க்க வேண்டும்.

ஐனநாயக தேர்தல்களில் அந்த விதிமுறைகளையே மீறிச் செயற்பட்டார்கள். அத்தோடு இங்குள்ள மக்களின் வளங்களையும் அழித்தார்கள். இதற்காக தெற்கில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் 3 காமினிகள் வந்தார்கள். அவ்வாறு இறக்கிய காமினி லொக்குகே, காமின திசாநாயக்க, காமின பெரேரா என மூன்று பேர் தலைமையில் வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியும். அவர்கள் ஜனநாயக உரிமையை பறித்தார்கள், யாழ் நூலகத்தை தீயிட்ட எரித்தார்கள். அழிவுகரமான செயற்பாடுகளைச் செய்தார்கள்".

"வடக்கு மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் பிரதான பாதை கல்வி ஆகும். அதையே அவர்கள் அழித்தார்கள். இங்கு கல்விக்கான இறைமை ஒடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்தக் கல்வியை நாங்கள் கட்டியெழுப்புவோம். ஆனால் அதனால் கல்விக் கொள்கைத் திட்டத்தை உருவாக்குவோம். அதனூடாக கல்வியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

இதேபோல சுகாதாரப் பிரச்சினைகளும் இருக்கின்றனர். குழந்தைகள் கற்பிணிகள் எனப் பாதிப்பு தொடர்கிறது. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அது பிரச்சினையில்லை. ஏனெனில் அவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை தானே. ஆக ஆட்சியாளர்களின் குழந்தைகள் மட்டும் தான் குழந்தைகளா என்று கேட்கிறோம்".

"இந்த நாட்டில் இனவாதத்தை புறக்கணிப்பதே எமது அரசியல் பயணத்தின் பாதையாக அமைகிறது. எந்த வகையான இனவாதத்திற்கும் நாம் இடமளிக்க கூடாது. ஆனால் இனவாதம் நாட்டில் அரசியலாக மாறியுள்ளது. எங்கள் நாட்டில் அந்த இனவாதமே யுத்தத்தை உருவாக்கியது. இதனால் வடக்கிலும் தெற்கிலும் குழந்தைகளை யுத்தத்திற்கு காவு கொடுத்தோம். ஆனால் இந்த முப்பது வருட யுத்தத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த அல்லது செய்யும் எந்த ஒரு மந்திரியின் குழந்தைகள் யாரும் இறந்ததில்லை. ஆனால், வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்தை தூண்டியது யார் என்றால் அரசியல்வாதிகள் தான். வடக்கு கிழக்கிலும் தெற்கிலும் சாதாரண தாய் தந்தையரின் குழந்தைகள் மீண்டும் ஒரு தடவை இனவாதத்திற்க்கோ அடிப்படை வாதத்திற்கோ இடமளிக்ககூடாது".

"இனவாதத்திற்கு எதிரான தேசிய அரசியல் ஒற்றுமையே எம்மிடம் உள்ளது. அந்த ஒற்றுமையை எவ்வாறு உருவாக்கலாம் அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பார்க்க வேண்டும். இந்த நாட்டில் எந்த ஒரு குடிமகனையும் இரண்டாம் நிலைக் குடிமகனாக மாற்ற முடியாது. நான் அண்மையில் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனைச் சந்தித்தேன். அவர் என்னிடம் இலங்கை குடிமகன் என்று என்னைச் சொல்ல எனக்கு விருப்பம். ஆனால் இலங்கையில் இரண்டாம் நிலைக் குடிமகனாக என்னைச் சொல்லிக் கொள்ள விருப்பமில்லை என கூறியிருந்தார்".

"நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் நாட்டில் முதலாம் நிலை இரண்டாம் நிலைக் குடிமக்கள் என அப்படியாக இருக்ககூடாது. நாம் பேசுகின்ற மொழியின், கலாச்சார அடிப்படையில் எங்களிடையே வித்தியாசம் இருக்க கூடாது. கொள்கை அடிப்படையில் ஒருமித்த செய்யற்பாடு வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவரும் இந்த நாட்டில் சமமாக மதிக்கப்பட வேண்டும். நாங்கள் சட்டம் உருவாக்குவதே அனைவருக்கும் தான். மதம் என்பது உங்கள் நம்பிக்கை. அது உயர்வு தாழ்வு என இருக்கக் கூடாது".

"தமிழ், சிங்களம், முஸ்லிம் என்றதில் ஒன்று உயர்வு ஒன்று தாழ்வு என்று கருத முடியாது. இவ்வாறு உயர்வு தாழ்வு என்று கருதுவதை இல்லாமல் ஒழிக்க வேண்டும். அதை அரசியலமைப்பிலும் சட்டத்திலும் கூட சாதாரண மக்களுக்கு அப்படியான சட்டக் கோவையை நாம் பெற்றுத் தருவோம். எந்தவொரு வகையிலும் வித்தியாசமாக நடாத்தப்படாத ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒரு சகோதரர்கள். நாம் இந்த நாட்டின் பிரைஜகள். இந்த நாட்டில் பிறந்து இந்த நாட்டிலேயே இறக்கின்றோம். எங்களிடையே வேறு என்ன வித்தியாசம். எந்தவொரு வித்தியாசத்திற்கும் இடமளிக்காத எல்லா வித்தியாசங்களையும் புறக்கணிக்கின்ற ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்குவோம். உங்கள் கையில் இருக்கும் அரசியல் பலத்தை அனைத்த மக்களுக்குமாக பயன்படுத்த வேண்டும்".

´´அரசியல் பலத்தில் இருந்து யாரும் தனிமைப்படுத்தப்படக் கூடிய அப்படியான ஆட்சி உருவாக்ககூடாது. அதனால் எம்மால் உருவாகும் ஆட்சியானது தமிழ், சிங்களம், முஸ்லிம் வடக்கு கிழக்கு தெற்கு என வித்தியாசம் இல்லாமல் அரசியல் பலத்தின் சம உறுப்பினர்களாக மாறுகின்ற அப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்தவோம். கடந்த காலங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் நடந்தன. அதற்கான அனைத்த மக்களிடமும் சென்றனர். அவ்வாறு சென்ற அந்தக் குழுவின் பிரதிநிதிகள் இப்போது இங்கு இருக்கின்றனர். ஆகையினால் அதன் போது என்ன நடந்தது என்று தெரிகிறது´´.

நாம் அனைவரும் இந்த நாட்டில் சமமான மக்களாக சகோதரத்துடன் ஒன்றாக வாழக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். எங்கள் தலைமுறை யுத்தம் செய்தது. இந்த மண் தேவையான அளவு இரத்தத்தால் ஈரமானது. எங்களுடைய தாய், தந்தை தேவையான அளவு கண்ணீர் சிந்தினர். அந்த நிலைமையை எதிர்கால குழந்தைகளுக்கு விட்டுச் செல்லக் கூடாது. மீண்டும் எமது நாட்டில் அப்படியான நிலைமைக்கு இடமளிக்ககூடாது. அது இந்த தலைமுறையின் கடமை´´.

´´தெற்கில் இனவாதக் கட்சிகள் தங்களுடைய இலாபத்திற்காக பலவகையான இனவாதத்தை வளர்த்தனர். அரசியலமைப்பு உருவாக்க கலந்துரையாடல் 72 தடவை நடந்தது. அதில் ஒரு நாள் ரணில் விக்கிரமசிங்க பேசியது ஒரேயொரு வாக்கியம் மட்டும் தான். அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடலில். இதை செய்வதைத் தடுக்கும் வகையிலேயே செயற்பட்டனர். அதனால் இவர்கள் மக்களுக்கு கொடுத்தது ஏமாற்றம் தான். உண்மையான சகவாழ்வு என்பது உயிர்வாழும் உரிமை. வடக்கை மட்டுமல்ல தெற்கையும் ஒவ்வொரு நாளும் ஏமாற்றுகின்றனர். இவ்வாறு மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்ற இடமளிக்க வேண்டுமா. ஆகவே, எமது நாட்டுக்கு புதிய அரசியல் கலாச்சாரம் தேவை அதைக் கட்டியெழுப்புவோம் என நாம் நம்புகின்றோம்´´.

´´மக்களை ஏமாற்றாது, வறுமையை விற்பனை செய்யாது, மக்களுக்கு உண்மையை கூறுகின்ற, மக்களின் தேவைக்காக செயற்படுகின்ற புதிய அரசியலை நாம் கட்டியெழுப்ப வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் இனவாதப் பிரச்சினையை புறக்கணித்தலோ தனிமைப்படுத்தலோ இடம்பெறக் கூடாது. மக்கள் அனைவருக்கும் தங்கள் தனித்துவத்தை ஏற்கக் கூடிய மதிப்பளிக்கககூடிய பாதுகாக்கக்கூடிய தங்களுடைய தனித்துவத்தை ஏற்று மதிக்கும் செய்ய வேண்டும்´´.

எங்களிடம் இருக்கும் பேதங்களைக்காட்டி தூரச் செல்லாமல் மதிப்பளித்து பாதுகாத்து சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு தேவையான புதிய பாதையை நாம் கட்டியெழுப்புவோம் என நாங்கள் நம்புகின்றோம். வடக்கில் புதிய அழிவிற்கான அரசியலுக்கு பதிலாக எதிர்கால எதிர்பார்ப்பிற்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும். அத்தகைய எதிர்பார்ப்புடைய அரசியலை எதிர்காலத்தில் முன்னெடுக்க குடிமக்களும் ஒன்றுபட வேண்டும். நாம் அனைவரும் ஒரே மரத்தில் தான் கட்டப்பட்டுள்ளோம். பல காலமாக இதனால் வேதனைக்கு உட்பட்டுள்ளோம். பல தசாப்தங்களாக கட்டப்பட்டுள்ள விலங்குகளை உடைக்கும் காலம் வந்து விட்டது. இன்னல் வேதனைகளை தகர்த்தெறிய வேண்டும். ஆகவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்த வெற்றிக்கான பாதையை கொண்டு செல்வோம் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »