எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாதுகாப்பு அமைப்பின் ஊடாக சுயேட்சை வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதாக குறித்த அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி ரஜித கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
