“கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் பல பகுதிகளில் இடம்பெற்ற
குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கோட்டாபய ராஜபக்ச தான் காரணம் என்றும் அவரால்
திட்டமிடப்பட்டே குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தபட்டதாகவும் அவரை கைது
செய்வதற்காக தாக்குதல் சம்பவம் தொடர்பாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட காணொளி ஒன்றை
நாளை அல்லது நாளை மறுதினம் வெளியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சி
செய்கிறது. குறித்த காணொளியை பத்தரமுல்ல பகுதியில் துஷார வன்னியராச்சி என்பவரும்
முஸ்லிம் நபர் ஒருவரும் இணைந்து தயாரித்துள்ள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள்
முன்னிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்து கத்தோலிக்க
மக்களின் வாக்குகளை திசைதிருப்ப முயற்சிகள் நடக்கின்றன”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கத்தோலிக்க பாராளுமன்ற
உறுப்பினர்கள் நீர்கொமும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவிப்பு.
பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்ஸா, அருந்திக
பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சுதர்ஷினி
பெர்னாண்டோபுள்ளே முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார மற்றும் முன்னாள் மாகாண சபை
உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
