Our Feeds


Monday, October 21, 2019

www.shortnews.lk

NPP க்கு வாக்களிக்கும் யாரும் இரண்டாம் வாக்கை யாருக்கும் வழங்க வேண்டாம் - அனுரகுமார வேண்டுகோள்

 


தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாக்களிக்கும் எவரும் தனது இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை பயன்படுத்த வேண்டாம் என தாம் வேண்டுகோள் விடுப்பதாக அதன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அவ்வாறு விருப்பு வாக்குகளை வழங்குவதற்கு தேர்தல்கள் சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாருக்கும் அதனைப் பயன்படுத்த அதிகாரம் உள்ளது.
அவ்வாறு பயன்படுத்துவதனால் எந்தவிதப் பயனும் இல்லை. ஏனெனில், கடந்த அரசாங்கத்திலும், தற்போதைய அரசாங்கத்திலும் எந்தவித வேறுபாடும் கிடையாது எனவும், இரண்டும் ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு விருப்பு வாக்குகளை வழங்குவதற்கு எஸ்.பீ. போன்றவர்களுக்கு முடியும். ஏனெனில், அவர்கள் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திலும் அமைச்சர்கள், நல்லாட்சி அரசாங்கத்திலும் அமைச்சர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »