Our Feeds


Monday, October 21, 2019

www.shortnews.lk

சஹ்ரானை கைது செய்யும் போது இந்த அரசாங்கமே அவனை காப்பாற்றியது - மஹிந்த காட்டம்

 


அடிப்படைவாதத்துக்கு உதவி வழங்கிய சில தலைவர்கள் தற்பொழுது அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அங்குணுகொலபெலஸ்ஸவில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவதில்லை. லட்சக்கணக்கானவர்களுக்கு தொழில் இல்லை. இந்த நிலைமையை ஏற்படுத்தியது யார்? இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்? சஹ்ரானா? அல்லது இந்த அரசாங்கமா? அல்லது சஹ்ரானுக்கு ஆதரவு வழங்கிய அரசாங்கமா? சஹ்ரானை கைது செய்யும் போது சஹ்ரானைக் காப்பாற்றியது இந்த அரசாங்கமே. தற்பொழுது இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளருடன் தான் சஹ்ரான் ஆதரவாளர்கள் உள்ளனர்.
நாட்டிலுள்ள பாதுகாப்பு பிரதானிகளை சிறையில் அடைத்ததன் விளைவையே கடந்த ஏப்ரல் 21 தாக்குதலாக அனுபவிக்க நேர்ந்தது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »