Our Feeds


Sunday, October 20, 2019

www.shortnews.lk

இந்த அரசு செய்வதையெல்லாம் செய்து விட்டு கோத்தாவின் தலையில் போட்டு விட்டு தப்பிக்க முடியாது - ஹஸ்மியா

 


சிறுபான்மையின ஒற்றுமையை வலியுறுத்தி நாம் மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக கொண்டு வந்தோம். ஆனால் முந்தைய ஆட்சியை விட இந்த ஆட்சியில் தான் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகமாக நடத்தப்பட்டன இந்த அரசு செய்வதையெல்லாம் செய்து விட்டு கோத்தாவையோ வேறு யாரையோ குறை சொல்லி தப்பிக்க முடியாது. 

தலைவர் அஷ்ரப் அவர்களின் வழியில் எமது வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பெண்களின் கல்வியறிவு, பாதுகாப்பு, சேவைகள் என்பவற்றில் கரிசனையுடன் செயல்படுபவர். அவர் ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எம்மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது. அவற்றை நீக்க வேண்டுமென்றால் நம் வாக்குகளை பலம் மிக்கதாக ஆக்க வேண்டும். அதற்காக நாம் ஒட்டக சின்னத்திற்கு வாக்களித்து பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும் என்று மகளிர் அணி தலைவி ஹஸ்மியா இன்று (20) நடந்த அக்கறைப்பற்று மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »