இலங்கை என்பது ஒரு நாடு. நாட்டு பிரஜைகள் அனைவரும் ஒரே குடுபத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கையர் " என்பதே இந்த குடும்பத்தின் பெயராகும். இதற்குள் சிங்களம், தமிழ், முஸ்லிம், கிருஸ்தவம் என்ற அனைவரும் உள்ளடங்குகின்றனர். ஆனால் இலங்கையில் பௌத்தர்கள் பெரும்பான்மையினர் என்பதால் ஒரு குடும்பத்தின் தலைவர் போன்று இவர்கள் ஏனையோரை வழிநடத்த வேண்டும். நான் அவ்வாறான ஒரு தலைவனாக செயற்படுவேன் என்பதை அனைத்து இன மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றோம். இதில் யார் முதலில் தோன்றியவர் என்பது பிரச்சினையல்ல. இவ்வாறு எண்ணுவதால் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தியிருப்பது அரசியல் கட்சிகளே ஆகும். சில இனங்களை அல்லது மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் காணப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகள் தான் தீர்மானித்தனர். அந்த தீர்மானமே இவ்வாறான பிரச்சினைகளுக்கு பிரதான காணமாக அமைந்தது.
இதன் மூலம் அரசியல்வாதிகளே மக்களை பிரித்து வைத்திருக்கின்றனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் சில மதகுருமார்களும் இதில் உள்ளடங்குகின்றனர். இதன் மூலம் தவறான வழியிலேயே நாம் சென்று கொண்டிருக்கின்றோம். எனவே முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடம் கட்சி சாராமல் செயற்படுமாறு கேட்டுக்கொள்றேன்.
ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றி பரவலாக பேசப்பட்டது. அத்தோடு சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனினும் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் இவை அனைத்தும் மறைந்துவிட்டன. காரணம் மக்கள் மத்தியில் இவ்வாறான பிரிவினையை ஏற்படுத்தியவர் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அவருக்கு முஸ்லிம் வாக்குகள் அவசியமாகின்றதால் அவரே இவற்றை நிறுத்தியுள்ளார். எனவே மக்கள் இவற்றை புரிந்து இம்முறை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.
