Our Feeds


Sunday, October 20, 2019

www.shortnews.lk

இனவாத வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளது - கெபே அமைப்பு எச்சரிக்கை

 


தேர்தல் மேடைகளில் ஆவேசமான பேச்சுக்கள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அறிவிப்புக்கள் என்பன அதிகரித்து வருவதாகவும் இந்த நிலைமை நீண்டு சென்றால் வன்முறைகள் வெடிக்கக் கூடும் எனவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கெபே அறிவித்துள்ளது.
கெபே அமைப்பானது, ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கு தனியான ஒரு பிரிவை நிறுவியுள்ளதாகவும் அதனூடாக இந்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதன் பணிப்பாளர் சுரங்கி ஆரியவங்ச தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »