Our Feeds


Wednesday, November 13, 2019

www.shortnews.lk

ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்களை காது கொடுத்துக் கேளுங்கள் சகோதரர்களே! - சட்டத்தரணி ஸரூக்

 



காட்டுக்கழுதைகள் போன்று சப்தம் போட்டு கத்தும் அரசியல்வாதிகள் மத்தியில் அமைதியாக பேசி அரசியல் எனும் சானக்கிய அலைகடலில் திக்கு தெரியாமல் அலைந்த எமது சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் கப்பலின் சுக்கானை வாக்காளர்களின் கைகளில் தந்திருக்கும் சகோதரன் ஹிஷ்புல்லாஹ்வின் கருத்துக்களை காது கொடுத்துக்கேளுங்கள் சகோதரர்களே !
கூட்டத்தோடு கோவிந்தா போடும் அரசியல்வாதிகளுக்காகவும் அவர்களுக்கு கூஜா தூக்கிகளாக செயற்படுமவர்களுக்காகவும் எமது உரிமைகளை பேரம் பேசாது பேரினவாதிகளிடம் விட்டுக்கொடுக்க முடியாது!.
அரசாங்க வேலை வாய்ப்புக்களுக்காக சுய கௌரவத்தை விட்டு விட வேண்டாம்.உத்தியோகம் பார்ப்பதற்கும் சுயகௌரவத்துடன் நாம் இந்நாட்டில் உயிர் வாழ வேண்டுமே!

எமது ஹாஜிமார்களை நிம்மதியாக வியாபாரம் செய்வதற்கான சட்டப்படியான பாதுகாப்புக்களை நாம் அரசியல் பேரம் பேசலினூடாக பெற்றுக்கொண்டால் எமது இளஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அவர்கள் அள்ளிவழங்குவார்கள்.

வேலை வாய்பபுக்களுக்காக கரட்டுகளுக்கு பின்னால் போகும் கழுதைகளின் நிலைமையில் எமது இளைஞர்கள் அரசியல் வாதிகளின் பின்னால் போக தேவையில்லை.

ஆகவே ஹிஷ்புல்லாஹ்வின் கருத்துக்களை உள்வாங்குங்கள். நாம் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு .
மாஷா அல்லாஹ் ! அக்காலத்தில் எல்லாத்துறைகளிலும் முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்கள். அதே ஒரு நிலை எமது நாட்டின் அரசியல் துறையில் சிறிய ஒரு ஒளிக்கீற்று மின்னுகிறது.அதனை பிரகாசிக்க செய்திடுவோம்.!
சட்டத்தரணி சறூக் - கொழும்பு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »