Our Feeds


Monday, November 4, 2019

www.shortnews.lk

பொய்யான செய்தி பரப்பும் ஊடகவியலாளர் - பொது மக்கள் அவதானம்

 

ஊடகவியலாளர்கள் தமக்கான கட்சி விசுவாதம் இருந்தாலும் ஊடகத் துறையில் அவற்றை வெளிப்படுத்தாது ஊடகத்தின் தர்மம் பாதுகாக்க வேண்டும் என்ற  நிலை மாறி தான் சார்ந்திருக்கும் கட்சிக்காக ஊடகத் தொழில் பார்க்கும் சிலர் தற்போது உருவாகியுள்ளார் என்பதை பூமுதீன் என்ற ஊடகவியலாளர் என்று தன்னை சொல்லிக் கொள்பவரின் பொய்யான செய்திகள் மூலம் அறிய முடிந்துள்ளது.

தமிழ் நாளிதல்களில் பணி புரிந்து வந்த இவர் தற்போது ஒரு பிரபல முஸ்லிம் அமைச்சரிடம் வேலை பார்க்கின்ற காரனத்தினால் அமைச்சருக்காக பல பொய்யான செய்திகளை புனைந்து, துணிந்து பரப்பி வருகிறார். அந்த வகையில் நமது ShortNews தளம் வெளியிடாத செய்திகளை பொய்யாக தயாரித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். 

பூமுதீனுக்கு எதிராக அவர் வெளியிட்டுள்ள பொய்யான தகவல்களை அடிப்படையாக கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க ShortNews தயாராகியுள்ளதுடன், இது போல் பொய் செய்தி பரப்புவோர் தொடர்பில் நமக்கு தெரிய வரும் போது அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »