எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படியென எமது மக்களுக்கு பல அறிவித்தல்கள் மூலம் பல அறிஞர்களினாலும் அரசாங்கத்தினாலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது இன்னும்
விளக்கம் போதாதலிருக்கும் வாக்காளர்களுக்காக சில இலகுவான விளக்கங்கள் வழங்குவதற்கு முயற்சிக்கிறேன்.
மிக நீண்ட வாக்கு சீட்டாமே?
நாளை இலங்கை பூராவும் நடைபெறவிருக்கும் தேர்தலில் உங்களுக்கு 2 அடி (24 அங்குலம்) நீளமான வாக்குச்சீட்டை தருவார்கள் அதனை கண்டதும் பயப்படவேண்டாம் .
அதனை எடுத்துச்சென்று உங்களுக்காக காட்டப்படும் வாக்குப்பெட்டியின் மேசையில்
நீள்பார்வையாக வைத்து நீங்கள் வாக்களிக்கும் நபரின் பெயரையும் அவரது சின்னத்தையும் அவசரமில்லாமல் தேடிக்கண்டு பிடியுங்கள் ஏன் எனில் ஒவ்வொரு வாக்காளருக்கும் 5 நிமிட நேரம் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.
5 நிமிட நேரம் கொடுத்தமைக்கான காரணம்.
35 வேற்பாளர்களின் பெயர்கள் மும்மொழிகளிலும் எழுதப்பட்டு 2 அடியாக வாக்குச்சீட்டு நீண்டிருப்பதனால் வாக்காளரினால் ஒவ்வொன்றாகப்பார்த்து தனது வேட்பாளரையும் சின்னத்தையும் அறிந்து கொள்வதற்கே.
எப்படி வாக்களிப்பது?
1.உங்களது வேட்பாளர் A என எடுத்துக்கொள்வோம் அவரது பெயருடன் அவரது சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும் இடத்தின் எதிரில் சிறிய பெட்டி போன்ற இடத்திற்குள் x புள்ளடி அடையாளத்தை இடலாம் அல்லது 1 என குறிப்பிடலாம்.
2.நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அதாவது நீங்கள் விரும்பியவாறு A,B,C அல்லது B,C,D என வாக்களிக்க விரும்பினால் 1,2,3 என மூவருக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும் அல்லது 1,2 என நீங்கள் விரும்பும் இருவருக்கு வாக்களிக்க முடியும். மூன்று வேட்பாளர்களுக்கு மேலதிகமாக வாக்களிக்க முடியாது.
நிராகரிக்கப்படும் வாக்குகள் எவை?
1.X அடையாளத்துடன் 1, 2 இலக்கங்கள் கலந்து இடப்பட்டவை.
2.X அடையாளத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இடுதல்.
3.2,3 இலக்கங்களை மாத்திரமிடுதல்.
அப்படியானால் எப்படி நாம் வாக்களிக்க வேண்டும்?
1. X மாத்திரமிடுங்கள்.
2. 1 மாத்திரமிடுங்கள் அல்லது
3. 1 ,2 என எழுதலாம்.
3. 1,2,3 என எழுதலாம்.
உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த எந்த எந்த ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்?
பின்வருவனவற்றில் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.
1.தேசிய அடையாள அட்டை(NIC)
2.கடவுச்சீட்டு (Passport).
3.சாரதி அனுமதி பத்திரம்(Driving Licence).
4.வயது முதிர்ந்தோர் அடையாள அட்டை.
5.ஆட்கள் பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மத குருமாருக்கான அடையாள அட்டை.
6.ஓய்வூதிய திணைக்களத்தின் அடையாள அட்டை.
7.தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை.
8.ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட புகைப்படத்துடனான அனுமதிப்பத்திரம்.
புர்கா அணியும் முஸ்லிம் சகோதரிகள் முகத்தை வீட்டிலிருந்தே திறந்து கொண்டே போக வேண்டுமா? வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததும் திறக்க வேண்டுமா?
வாக்குச்சாவடிக்குள் சென்று அடையாள அட்டையை எடுத்து அடையாளத்தை உறுதி படுத்தும் உத்தியோகத்தருக்கு மாத்திரம் முகத்தைத் திறந்து காட்டினால் போதும். வரிசையில் நிற்கும் போது முகத்தை திறக்க வேண்டுமென்ற அவசியமில்லை. யாரும் அப்படி வற்பறுத்த முடியாது.
தேர்தல் தினத்தில் அரசியல்வாதிகளின் கூஜா தூக்கிகலாக செயற்படுபவர்களை சிறைக்கு அனுப்பலாமா?
தேர்தல் ஆணையாளரினால் வாக்காளர்களுக்கு தாங்கள் சுயமாக சிந்திப்பதற்கு இரு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்கள் நாளைய வாக்குப்பதிவுடன் நிறைவு பெறும் இந்த இரு நாட்களுக்குள்.
1.வேட்பாளர்களின் புகைப்படம் சின்னத்தை முத்திரையின் அளவில் பிரிண்ட் பண்ணி அதனை இரகசியமாக வாக்காளர்களிடம் கொடுத்தல் அதனை வாக்காளர்களுக்கு தெரியும் விதத்தில் நிலத்தில் போடுதல்.
2.வீதியில் ,மின்சாரகம்பம் மதில் சுவர்களில் சின்னங்களையும் வேட்பாளர்களின் பெயர்களை வரைதல்.
3.இவருக்கு போடுங்கள் என்று வாக்காளர்களை வற்புறுத்தல்.
4.வாகனங்களில் வேட்பாளர்களின் சின்னத்தை புகைப்படத்தை ஒட்டிவைத்தல் போன்ற தவறுகள் செய்யும் கூஜா தூக்கிகளை தங்களது வாக்குக்களை கூட போடாமல் சிறையில் வாட வைத்து விடும்.
இது சம்பந்தமான தவறுகள் எங்கு நடந்தாலும் 119 அல்லது அருகில் நிற்கும் பொலிசாரிடம் முறையிட்டு தவறு செய்தவர்களை முறையிடலாம்.
வாக்களிக்கும் நேரம்?
காலை 7 தொடக்கம் பிற்பகல் 5 வரை முடியுமானவரை காலையில் சென்று வாக்களிக்க முயற்சியுங்கள்.
எல்லா வளங்களும் நிறைந்த எமது நாட்டின் அபிவிருத்திற்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும் எந்தவித தயவு தாட்சன்யம் காட்டாது செயற்படக்கூடிய ஜனாதிபதியை தெரிவு செய்து தரும் படி இறைவனை வேண்டிக்கொள்வோம்!
சட்டத்தரணி சறூக்-கொழும்பு
