Our Feeds


Thursday, November 21, 2019

www.shortnews.lk

காட்டுக்குள் வேட்டையாடச் சென்ற கர்ப்பிணி பெண்ணை கடித்துக் குதறிய வேட்டை நாய்கள் - பிரான்ஸ்

 


பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள வில்லெர்ஸ் - கோடோரேட் எனும் நகரின் அருகே காட்டுக்குள் வேட்டையாடச் சென்ற கர்ப்பிணி பெண்ணை வேட்டை நாய்கள் கடித்துக் குதறியதால் அவர் உயிரிழந்தார். 
அந்த நாய்கள் காட்டுக்குள் மான் வேட்டையாட அழைத்துச் செல்லப்பட்டவை. 
ஆறு மாத கருவைச் சுமந்திருந்த, 29 வயதான எலிசா பிலார்ஸ்கியின் உடல் ரெட்ஸ் எனும் காட்டுப் பகுதியில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. 
எலிசாவை கடித்துக் குதறியவை எந்த நாய்கள் என்று அடையாளம் காண 93 நாய்களிடம், எலிசாவின் டி.என்.ஏ மாதிரிகளை அடையாளம் காண சோதனை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »