Our Feeds


Thursday, November 21, 2019

www.shortnews.lk

தாலிபான்களினால் கடத்தப்பட்ட இரண்டு பேராசிரியர்கள் விடுதலை

 


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த 2016ஆம் ஆண்டு தலிபான் அமைப்பால் பயணக் கைதிகளாக கடத்தப்பட்ட இரண்டு பேராசிரியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த இந்த இரண்டு பேராசிரியர்களும் சிறையில் இருந்த 3 தலிபான் உறுப்பினர்களின் விடுதலைக்கு கைமாறாகவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கான் அரச தலைவர் அஷ்ரப் கானி ஏற்றுக்கொண்ட கைதிகள் பரிமாற்று ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தலிபான்களின் கைதிகளாக இருந்த அமெரிக்க பல்கலைகக்கழக பேராசிரியர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் சாபுல் மாகாணத்தின் நவ்பஹர் மாவட்டத்தில் வைத்தது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கெவின் கிங் (63) மற்றும் திமோதி வீக்ஸ் (50) ஆகிய இந்த இரண்டு பேராசிரியர்களும் இராணுவ சீருடையில் வந்த தலிபான் ஆயுததாரிகளினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் கடத்தப்பட்ட இருவரது புகைப்படங்கள் மற்றும் காணொகள் வெளியானதையடுத்து கடத்தப்பட்டவர்களை மீட்ப்பதற்கு ஆப்கானிஸ்தான் அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் பல்முயற்சிகளை மேற்கொண்டாரும் அவை அனைத்தும் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இவர்களை விடுவிப்பதற்காக கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம் ஒன்றை ஆப்கானிய ஜனாதிபதி அஷ்ரப் கானி தயாரித்திருந்தார்.



தலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட இரண்டு பேராசிரியர்களையும் அமெரிக்க படையினர் தமது இரணுவ ஹெலிகொப்டர்கள் ஊடாக, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்றதையடுத்து ஆப்கான் சிறையில் இருக்கும் 3 தலிபான் உறுப்பினர்களும் ஆப்கானிஸ்தான் அரசால் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »