இரண்டு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமது சமூகம் சார்ந்த விடயங்கள் எவையும் குறிப்பிடப்பட்டில்லை என்று குற்றம் சுமத்துகின்றார்கள். இதே குற்றச்சாட்டை முஸ்லிம் தலைமைகளின் மீதும் சொல்கின்றார்கள்.
நாங்கள் சமூகம் சார்ந்த விடயங்களில் எவ்வித உடன்படிக்கையும் செய்யவில்லை என்று கூறுகின்றார்கள். இவ்வாறு உடன்படிக்கை செய்வதன் ஊடாக சிறுபான்மை சமூகத்திற்கு சாதகமாக எவற்றையும் சொல்லிவிட்டால் அதனை கொண்டுபோய் அப்பாவி நாட்டுப்புற பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் வித்தியாசமான இனவாத நோக்கோடு பிரசாரம் செய்ய ஒரு கும்பல் காத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள் மிகவும் அவதானமாகத் தான் விவகாரங்களை கையாள வேண்டியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை (08) திருகோணமலையில் இடம்பெற்ற போது அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
