Our Feeds


Wednesday, November 27, 2019

www.shortnews.lk

முஸ்லிம் ஒருவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படாததை முஸ்லிம்களும், முஸ்லிம் நாடுகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றன - காதர் மஸ்தான் MP

 


கோத்தபாயவின் அரசாங்கத்தில் முஸ்லிம் ஒருவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமை குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுடன் பிபிசி தமிழ் பேசிய போது; "முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவில்லை என்பதை முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் நாடுகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றன" என்று கூறியதோடு, "அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அல்லது இன்று வழங்கப்பட்ட ராஜாங்க அல்லது பிரதியமைச்சர் பதவிகளுக்கேனும் முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்" என்றார் அவர்.
இருந்தபோதும் அனுபவத்தில் மூத்தவர்கள் என்ற அடிப்படையில்தான் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், அதனால், ஆளுந்தரப்பில் முஸ்லிம்கள் இடம்பெறாமல் போயிருக்கக் கூடும் எனவும் காதர் மஸ்தான் பிபிசி தமிழிடம் கூறினார்.
நன்றி: பி.பி.சி தமிழ்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »