Our Feeds


Monday, December 16, 2019

www.shortnews.lk

சமஷ்டி - அதிகாரப்பகிர்வு சாத்தியமற்றது - ஜனாதிபதி தெரிவிப்பு

 


சமஷ்டி மற்றும் அதிகாரப்பகிர்வு என்பன நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று கொழும்பில் ஊடக பிரதானிகளுடன் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி மற்றும் அதிகாரப்பகிர்வு என்று கூறி கூறி சுமார் 70 வருடம் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ள அரசியல் வரலாறு உள்ளது. பெரும்பான்மை மக்கள் விரும்பாத ஒன்றை எப்படி கொடுப்பதுஅப்படி கொடுப்பதாக கூறி ஏமாற்றக் கூடாது. அபிவிருத்தி மூலமே நிரந்தர ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும். காணாமல் போன விவகாரம் குறித்து இன்று பேசப்படுகிறது. போரின் போது இருதரப்பிலும் காணாமற்போயினர். ஒருசமயம் முகமாலையில் 120 சிப்பாய்களின் சடலங்கள் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை அழுகிய நிலையில் இருந்தன.இரு தரப்பிலும் இந்த நிலை இருந்தது..

-என்றார் ஜனாதிபதி



சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விடயம் சோடிக்கப்பட்ட ஒரு கதையென குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி ,இன்று காலை சுவிஸ் தூதுவருடன் விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றதாக கூறினார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »