Our Feeds


Wednesday, December 18, 2019

www.shortnews.lk

ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் எனக்கூறி மோசடி செய்வோர் தொடர்பில் தகவல் வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை

 


ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி பொது மக்களிடம் சட்டத்துக்கு முரணான வகையில் அழுத்தங்களை வழங்கிவரும் நபர்கள் தொடர்பில் கண்டறிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என்றோ, ஜனாதிபதியின் செயலாளர் என்றோ தெரிவித்து, சட்ட முரணான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பான தகவல்களை கொழும்பு ஊழல் விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரி ரசல் டி சொய்சாவின்  0718591736 எனும் தொ. இலக்கத்துக்கோ அல்லது 119 அவசர அழைப்புக்கோ வழங்குமாறும் பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »