எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ !

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ எம் பியை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் தொடர்ந்தும் இருப்பார்.அது தொடர்பில் பின்னர் ஆராய தீர்மானிக்கப்பட்டது . கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பிற்பகல் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.
பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது இந்த நியமனம் குறித்து சபைக்கு அறிவிக்கப்படும்.அதன் பின்னரே சஜித் உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் பெறுவார்.