“வில்பத்து வன அழிப்பு மற்றும் உயிர்த்த ஞாயிறு தின
தாக்குதல்களை முன்வைத்து என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளும், சேறுபூசல்களும்
இடம்பெறுகின்றன. ஏற்கனவே நடந்த விசாரணைகளில் என் மீது எந்த குற்றமும்
கண்டறியப்படவில்லை. இருந்தாலும் தேவைப்படின் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்து
விசாரணைகளை செய்யுங்கள்..” என ரிஷார்ட் எம்.பி, ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
