Our Feeds


Wednesday, December 18, 2019

www.shortnews.lk

Dr ஷாபிக்கு எதிரான விசாரனைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பம்

 


குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீனுக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பம் முதல் முன்னெடுக்கப்படுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசேட குழுவொன்று நேற்று (17) குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அதிகாரியின் தலைமையிலான குழு, குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சரத் வீர பண்டார, பிரதிப் பணிப்பாளர் சந்தன கந்தன்கமுவ ஆகியோரைச் சந்தித்து இந்த விசாரணைகள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், வைத்தியர் சாபியினால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சிங்கள தாய்மார்களிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மீண்டும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் வைத்தியர் சாபியின் சொத்துக்கள் குறித்தும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »