Our Feeds


Thursday, January 9, 2020

www.shortnews.lk

ரஞ்சன் ராமனாயகவின் கட்சி உறுப்புரிமையை நீக்க ஐ.தே.க ஆலோசனை

 


பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால் அவரின் கட்சி உறுப்புரிமையை நீக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அறியமுடிகின்றது.

ஏற்கனவே ரஞ்சன் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அந்த விசாரணைகளின் பின்னர் அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படுவாரென்றும் எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்காதிருக்கவும் பரிசீலிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதேவேளை தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்களை ஒலிப்பதிவு செய்த ரஞ்சன் எம் பியின் செயற்பாடு கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »