Our Feeds


Tuesday, January 7, 2020

www.shortnews.lk

அரசு எங்களை ஏமாற்ற முயன்றால் ஒத்துழைக்க மாட்டோம் - எதிர் கட்சி தலைவர் சஜித் பாராளுமன்றில் உரை

 


'அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவை நாங்கள் வழங்குவோம். ஆனால் எங்களை ஏமாற்றும் வேலைகளை செய்தால் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். அமெரிக்க ஒப்பந்தம் கூடாதென்று நீங்கள் கூறினீர்கள். அது உண்மையெனில் நாங்கள் இருதரப்பும் இணைந்து அதனை இரத்து செய்வோம். அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தினால் குறிப்பாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் நலன்கருதி மானியம் வழங்குவதாக சொல்லப்பட்டது. அது வழங்கப்படுமா என்பதை அரசு அறிவிக்க வேண்டும். முற்போக்கு சிந்தனை கொண்ட எதிர்க்கட்சியாக நாங்கள் செயற்பட விரும்புகிறோம். ஆனால் மக்களை ஏமாற்ற விடமாட்டோம்..



எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பின்னர் சஜித் பிரேமதாச எம்.பி இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »