குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று டாக்டர் மொஹம்மட்
ஷாபியை மீண்டும் சேவையில் அமர்த்த நடவடிக்கைளை எடுத்துவரும் அரச சேவைகள் ஆணைக்குழு, அவர்
தொடர்பில் உரிய பரிந்துரைகளை தருமாறு சுகாதார அமைச்சைக் கேட்டுள்ளது.
அதேசமயம் மகப்பேற்று விவகாரங்களால் சர்ச்சையில் சிக்கிய
டாக்டர் ஷாபி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த விடயத்தை
மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரச சேவைகள் ஆணைக்குழுவிடம்
கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
news source : tamilan
