Our Feeds


Sunday, January 12, 2020

www.shortnews.lk

ரஞ்சன் ராமனாயக MP யின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் நாளை விசாரனைகள் ஆரம்பம்

 



பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் நாளைய தினம் (13) விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இருவட்டுக்கள் அடங்கிய பொருட்களை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம் முன்வைத்து அது தொடர்பான அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் கடந்த 9 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைவாக கைப்பற்றப்பட்ட இருவட்டுக்கள் அடங்கிய பொருட்களை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம், குற்றப்புலனாய்வு பிரிவு ஒப்படைத்துள்ளது.

அதேபோல் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட அனுமதி பத்திரம் காலவதியான துப்பாக்கியும் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »