Our Feeds


Sunday, January 12, 2020

www.shortnews.lk

இந்தியாவில் தான் அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் - WHO அறிக்கை

 


தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவில்தான் அதிகளவு தற்கொலைகள் நிகழ்கின்றன என்று உலக சுகாதார அமைப்பின் (W.H.O) சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக W.H.O கூறுகிறது.

இந்த எண்ணிக்கையானது, மலேரியா, மார்பகப்புற்றுநோய், போர் அல்லது படுகொலைகளில் நிகழும் இறப்புகளின் எண்ணிக்கையை விட அதிகம்.

2018-ம் ஆண்டுக்கான, `விபத்தின் காரணமாக இறப்புகள் மற்றும் தற்கொலைகள்' குறித்த தேசிய குற்றப்பதிவு ஆவணக்காப்பகத்தின் ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின்படி 2018-ம் ஆண்டு இந்தியாவில் 1,34,516 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2017-ம் ஆண்டில் 1,29,887 பேர் தற்கொலைகள் செய்துகொண்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »