கோவிட் 19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமான இதுவரை 1357 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 42200 பேர் வைரஸ் தாக்கத்தினால் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் ஹுபைஸ் பிராந்தியத்தில் மாத்திரம் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சுமார் 25 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசை தடுப்பதற்கான மருந்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
