Our Feeds


Wednesday, February 26, 2020

www.shortnews.lk

552 வாக்குகள் பெற்று வட்டாரத்திலேயே படுதோல்வி அடைந்த அஸாத் சாலி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி

 


தாம் ஐக்கிய தேசிய முன்னனியிலிருந்து விலகியுள்ளதாகவும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புறா சின்னத்தில் தனித்த போட்டியிடவுள்ளதாகவும் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

கேகாலை உள்ளிட்ட 3 மாவட்டங்ளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாராகியுள்ளதாகவும் மற்ற மாவட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

அரசியலில் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அஸாத் சாலி இறுதியாக நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் கொழும்பில் போட்டியிட்டு வெரும் 552 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டு தான் போட்டியிட்ட வட்டாரத்திலேயே படுதோல்வியடைந்தார்  இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக ஸாலி அறிவித்திருப்பது நகைப்புக்கிடமாக உள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »