இந்தியாவின்
மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள இந்திய குடியுரிமை திருத்த சட்டமூலம் இந்திய மக்களின்
பிறப்புரிமையை தடை செய்வதாக கூறி இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக பெரும் போராட்டம்
நடைபெற்று வருகிறது.
இந்திய
தலை நகரான டெல்லியின் பல இடங்களில் தர்ணாக்களும், உண்ணாவிரத போராட்டங்களும், என மக்கள்
தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அரசுக்கு
எதிரான இந்த போராட்டங்களில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி அனைத்து மத, இன குழுக்களும் ஒன்றாக
இணைந்தே போராடி வருகின்றனர்.
அமெரிக்க
அதிபர் ட்ரம்ப் தனது இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் குடியுரிமை திருத்த
சட்டத்திற்கு எதிராக டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ஒரு
குழு கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
குறித்த
தாக்குதல் இறுதியில் பெரும் கலவரமாக மாறியுள்ளதுடன், இதுவரை சுமார் 10 பேர் மரணித்துள்ளதாக
தெரியவருகின்றது.
150
க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
முஸ்லிம்கள்
வாழும் பகுதிகள் திட்டமிட்ட வகையில் தாக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள், வாகனங்கள் மற்றும்
கடைகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
கலவரத்தில்
கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சர்பராஸ் அலி என்ற முஸ்லிம் வாளிபர் பி.பி.சி
சர்வதேச செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில்.
அவர்கள்
என்னை கடுமையாக தாக்கினார்கள்.
எனது
தந்தையையும் கடுமையான முறையில் தாக்கினார்கள்.
என்
தந்தையையும் என்னையும் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட சொன்னார்கள்.
என்னிடம்
எனது அடையாள அட்டையை காட்ட சொன்னார்கள். நான் பொய்யான பெயர் ஒன்றை கூறினேன். அந்த நேரத்தில்
அங்கிருந்தவர்களில் ஒருவர் எனது ஹெல்மட்டை கலட்டினார். அப்போது இன்னொருவர் இரும்புக்
கம்பியால் என்னை கடுமையாக அடித்தார்.
எனது
மோட்டார் பைகை தாக்கி தீ வைத்து எரித்தார்கள்.
பெயரை
வைத்து முஸ்லிம்களை கண்டறிந்து முஸ்லிமாக இருந்தால் மாத்திரம் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்துக்கள்
யாரையும் அவர்கள் தாக்கவில்லை. நான் பார்த்துக் கொண்டிருக்க பலரை அவர்கள் ஒன்றும் செய்யாமல்
அனுப்பினார்கள்.
ஆனால் எது பெயரை கூற சொல்லி அடித்து எனது ஆடையை அவிழ்க்க சொன்னார்கள்
என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சர்பராஸ் அலி பி.பி.சி க்கு தெரிவித்தார்.
