Our Feeds


Tuesday, February 25, 2020

www.shortnews.lk

30 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட ஹுஸ்னி முபாரக் இன்று மரணமடைந்தார்

 


30 ஆண்டுகள் எகிப்தின் பலம் பொருந்திய ஜனாதிபதியாக செயல்பட்டு 2011ம் ஆண்டு நடைபெற்ற அரபு புரட்சியின் பின்னர் பதவி விலகிய ஹுஸ்னி முபாரக் தனது 91வது வயதில் இன்று மரணமடைந்தார்.

எகிப்தின் 4வது ஜனாதிபதியாக 1981 முதல் செயல்பட்ட ஹுஸ்னி முபாரக் அரபு வசந்த புரட்சியுடன் பதவி கவிழ்க்கப்பட்டதுடன் ஹுஸ்னி முபாரக் மற்றும் அவருடைய இரண்டு மகன்களும் கொலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் வைக்கப்பட்டனர்.

முபாரக்கின் இரண்டு மகன்களும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்பட்ட நிலையில் முபாரக் கெய்ரோவில் உள்ள இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

தனது வழக்கு தொடர்பில் மேன்முறையீடு செய்திருந்த ஹுஸ்னி முபாரக்கின் உடல் நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு 2017ம் ஆண்டு அவரை நீதி மன்றம் விடுதலை செய்திருந்தது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »