Our Feeds


Tuesday, February 18, 2020

www.shortnews.lk

மைத்திரியை கூட்டணியில் இணைத்துக் கொண்டதில் மொட்டு அணிக்குள் அதிருப்தி

 


ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஶ்ரீ லங்கா சுரந்திர கட்சி ஆகியவை இணைந்து உருவாக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னனியில் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை இணைத்துக் கொண்டமைக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நடுநிலை வகிக்க போவதாக அறிவித்த மைத்திரி பொதுஜன பெரமுனவிற்க்கு எவ்வித ஆதரவுகளை வழங்கவில்லை என்பதுடன், 04/21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் மைத்திரி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் மைத்திரியை கூட்டணியில் இணைத்ததை SLPP உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வில்லையென தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் வெளிவராத ஐ.தே.க வின் ரகசியங்களை மைத்திரியை மேடையேற்றுவதின் மூலம் வெளியிட வைக்க முடியும் என்றும், அதனால் ஐ.தே.க வின் வாக்கு பலத்தை குறைக்க முடியும் என்பதாலும் தான் மைத்திரியை கூட்டணியில் இணைத்துள்ளதாக SLPP உறுப்பினர்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »