சீனாவில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 1868 பேர் உயிரிழந்துள்ளதுடன், 72436 பேர் இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
வைரஸ் தொற்றின் ஆற்றல் தற்போது குறைய ஆரம்பித்துள்ளதாகவும் கடந்த 15ம் திகதியுடன் வைரஸ் தொற்றின் வேகம் 21.6 வீதமாக குறைந்துள்ளதாக சீன தேசிய மருத்துவ கமிஷன் தெரிவித்துள்ளது.
