இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகள் இயற்கை தன்மையற்றவை என அரச மருத்துவர் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் நவீன் டீ சொய்சா நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்
இறக்குமதி செய்யப்படும் பால் மா குறித்து தொடர்ந்தும் எச்சரித்து வருகின்றோம் அவை பால் அல்ல அதில் ராசாயன கலவைகள் மாத்திரமே இருக்கின்றன அதில் பாம் எண்ணை அல்லது தேங்காய் எண்ணையை கலப்படம் செய்கிறார்கள் இதனை நாமாக கூறவில்லை. குறித்த பால் மா நிறுவணங்களின் இணையதளத்திலேயே இவை குறிப்பிடப் பட்டுள்ளன
இவை மனித இரத்த நாளங்களில் படிந்து கொலஸ்ரோல் ஏற்படும், கெலஸ்ரோல் ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படும்
அதே போல் நீரழிவு நொய், அதிக இரத்த அழுத்தம், புற்று நோய் ஆகியவை அதிகம் ஏற்படுவது கடந்த 30 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது
பாடசாலை மாணவர்களுக்கு கூட இந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது
பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் புற்று நோய்களுக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளே காரணமாக இருக்கின்றது
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் 12 வயதுக்கு குறைந்த ஏராளமான பிள்ளைகள் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
மஹரகம புற்று நோய் மருத்துவமனையில் 140க்கும் அதிகமான பிள்ளைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவற்றுக்கும் பால் மாக்களுக்கும் நெறுங்கிய தொடர்பிருக்கின்றது
