கொரோனா வைரஸ் பல நாடுகளையும் பாதித்து வரும் நிலையில் சீனாவுக்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற நாடுகளுக்கும் இது பரவ ஆரம்பித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானில் தான் முதன் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஈரானில் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் மரணித்திருப்பதாக கூறப்படும் நிலையில் ஈரானின் சுகாதார பிரதியமைச்சர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து ஈரானின் துணை ஜனாதிபதி மசூமி இப்திகாரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
