இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் கலவரங்கள் மற்றும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சலே பாக்லெட் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார்.
அமைதியாக ஆர்பாட்டம் நடத்தியவர்கள் மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தும் போது பொலிசார் செயல்பட வில்லை என்பதை அறிந்தேன். அதே போல் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிசார் மேலதிக படைகளை பயன்படுத்திய செய்தியையும் அறிந்து கொண்டேன்.
இந்த வன்முறையை தடுத்து முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென இந்தியாவின் அனைத்து தலைவர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சலே பாக்லெட் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார்.
