Our Feeds


Friday, February 28, 2020

www.shortnews.lk

நிம்மதியாக தூங்குங்கள் எந்த பிரச்சினையும் வராது - டெல்லி கலவரத்தில் இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்

 


டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜாப்ராபாத், மஜ்பூர், சாந்த்பாக், குரேஜ்காஸ்க், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் வாழ்ந்து வரும் இந்து சகோதரர் ஒருவர் கலவரத்தின் போது நடைபெற்ற சம்பவங்களை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முஸ்லிம்கள் வாழும் பகுதியான சிவ விஹார் பகுதியில் வாழ்ந்து வரும் ராம்சேவக் டெல்லி கலவரம் பற்றி தெரிவிக்கும் போது, முஸ்லிம்களுக்கு மத்தியில் நான் வாழும் இந்த பகுதியில் இரண்டு வீடுகளே இந்துக்களுக்கு சொந்தமானது. ஆனால் இங்க நாங்கள் ஒரு போதும் எந்த சிக்களையும் எதிர்கொள்ள வில்லை. கலவர நேரத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் என்னிடம் வந்து நிம்மதியாக தூங்குங்கள் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என உறுதியளித்தார்கள் என நெகிழ்ந்தார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »