Our Feeds


Friday, February 28, 2020

www.shortnews.lk

கொரோனா பரவில் அச்சம் காரணமான பொது நிகழ்வுகளில் பங்கெடுப்பதை நிறுத்தினால் வடகொரிய அதிபர்

 


சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் அதன் அண்டைய நாடுகள் மற்றும் ஐரோப்பிய, மத்திய கிழக்கு அரபு நாடுகள் என இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்நிலையில் சீனாவின் அண்டை நாடான தென்கொரியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்திருப்பதினால் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா கொரோனா பரவல் இடம் பெறாமல் இருக்க முழு மூச்சுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. 

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் வடகொரிய அதிபர் கிம் ஜுங் உன் பொது இடங்களுக்கோ, பொது நிகழ்ச்சிகளிலோ பங்கெடுப்பதை முற்று முழுதாக தவிர்த்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »