இந்தியாவின் மோடி அரசாங்கம் கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பாரிய ஆர்பாட்டங்களும், தர்ணாக்களும் அனைத்து இன, மத மக்களினாலும் ஒன்றிணைந்து நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்திய தலைநகர் டெல்லியில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்பாட்டத்திற்கு எதிராக பெரும் கலவரம் முடுக்கி விடப்பட்டு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜாப்ராபாத், மஜ்பூர், சாந்த்பாக், குரேஜ்காஸ்க், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் முஸ்லிம்களின் வீடுகள் பள்ளிவாயல்கள் மற்றும் வியாபார நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், இதுவரை 40க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த கலவரங்கள் தொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டெரஸ் இந்தியாவுக்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் கலவரம் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் ஏற்பட்டமை வருத்தமளிக்கிறது.
வன்முறையை தவிர்க்க வேண்டும். நான் இந்தியாவின் நிலையை கவனித்து வருகிறேன்.
நான் என் வாழ்நாள் முழுவதும் காந்தியின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டவன்.
உண்மையான சமூக நல்லிணக்கத்தை உண்டாக்குவதற்கு முன்பை விட அதிகமாக காந்தியின் போதனைகள் இப்போது தேவைப்படுகிறது.
ஆர்பாட்டக்காரர்களை அமைதியாக ஆர்பாட்டம் செய்ய விட வேண்டும்.
அதே நேரம் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் அதனை கொண்டுவர வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
