சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்பிய மொங்கோலிய ஜனாதிபதி பட்டுள்கா கல்ட்மாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக மொங்கொலிய செய்தி நிறுவணம் மொன்ஸ்டமே தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்தைகளை நடத்தி விட்டு மீண்டும் மொங்கோலியா திரும்பிய போதே விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி மற்றும் அவருடன் பயணித்த குழுவினரை அதிகாரிகள் குழு அழைத்து சென்றுள்ளது.
