Our Feeds


Wednesday, February 26, 2020

www.shortnews.lk

ஷம்பிக்க ரணவக்க மீண்டும் இனவாத முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளார் - ஹரீஸ் MP கண்டனம்

 


முன்னால் அமைச்சர் ஷம்பிக்க ரணவக்க மீண்டும் தனது இனவாத முகத்தை காட்ட ஆரம்பிப்பது மிகவும் ஆபத்தானது. அவருடைய தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த நாட்டு மக்களை தவறாக வழிநடத்த எத்தனித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என முன்னால் அமைச்சரும் மு.கா வின் பிரதி தலைவருமான ஹரீஸ் MP தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் தமது மதம், மொழி, கலாசாரம், பண்பாடுகளை பின்பற்றுவதற்கு இலங்கை அரசியல் யாப்பு இடம் வழங்கியிருக்கிறது. அதனை மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. 

இனவாத குரல்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஒலிக்க ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில் சகல அரசியல் தலைமைகளும் ஒன்றிணைந்து அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென தனது அறிக்கையில் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »