Our Feeds


Wednesday, February 26, 2020

www.shortnews.lk

மஹர பள்ளிவாயலில் சிலை வைப்பு - முஸ்லிம்களின் மத உணர்வை காயப்படுத்திய இழிசெயல் - ரிஷாத் கண்டனம்

 


100 வருடம் பழைமை வாய்ந்த மஹர சிறைச்சாலை வளாக பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவியதுடன், அதனை ஓய்வு அறையாக மாற்றியமைத்து, முஸ்லிம்களின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதென சுட்டிக்காட்டியுள்ள ரிஷாத் பதியுத்தீன் இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »