கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் 20 தொடக்கம் 50 வயதுக்கு உற்பட்டவர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று நினைத்துக் கொண்டு அலட்சியமாக இருக்க வேண்டாம் என சர்வதேச நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக உயிரிழக்கும் சாத்தியங்கள் இருப்பதுடன் இருதய பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
இதே வேலை இளம் வயதுடையவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றோ மரணிக்க வாய்ப்பில்லை என்றோ கூற முடியாது எனவும் நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.
சீனாவில் கொரோனா பரவியதில் எவ்விதமான நோய்களுமற்ற பலரும் மரணித்துள்ளதுடன், இளவயதினர் பலரும் மரணித்துள்ளதை தாம் அவதானித்துள்ளதாக உலக சுகாதார நிறுவணத்தை சேர்ந்த புரூஸ் அய்ல்வோர்ட் தெரிவித்துள்ளார்.
ஒன்றுக்கு மேற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் 50 வீதத்திற்கு குறைவாகவும், சில சந்தர்பங்களில் 20 வீதத்திற்கு குறைவானவர்களும் மரணித்துள்ளதாக புரூஸ் அய்ல்வோர்ட் மேலும் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் 30,40,50 வயதினரும் அதிகமாக மரணிக்கின்றனர் என்கிறார் புரூஸ்
