Our Feeds


Saturday, March 14, 2020

www.shortnews.lk

கொரோனா தாக்கம் - அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் - 50 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு

 


உலகம் பூராகவும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள ஆபத்தான கொரோனா வைரஸ் காரணமாக 5420 பேர் இன்று வரை மரணமடைந்துள்ளனர். 1,45,500 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை 2 ஆயிரத்திற்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 41 பேர் கொரோனா தாக்கத்தினால் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதினால் அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

“நான் உத்தியோகபூர்வமாக அவசர நிலையை பிரகடனம் செய்கிறேன்.  அடுத்த 08 வாரங்கள் வைரஸை கட்டுப்படுத்தும் முக்கிய தருணங்களாகும் என தெரிவித்த டொனால்ட் ட்ரம், அவசர நிலையில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »