சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸினால் உலகில் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டது சீனா. சீனாவின் ஹூபை, வூஹான் மாகாணங்களில் இருந்தே இந்த வைரஸ் ஆரம்பமாக பரவ ஆரம்பித்தது.
சுமார் ஒரு லட்சம் பேர் வரை சீனாவில் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் இதுவரை 100 க்கும் அதிகமான நாடுகளுக்கு கொரோனா பரவியுள்ளதுடன், சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த வைரஸினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 70 % வீதமானவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த திங்கள் வரை கொரோனா வைரஸினால் சீனாவில் பாதிக்கப்பட்டிருந்த 80,000 க்கும் அதிகமானவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் நோய்த் தாக்கத்திலிருந்து விடுபட்டு மருத்துவ மனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவிலிருந்து விடுபட்டாலும் அதன் முழுமையான தாக்கத்திலிருந்து மீண்டுவர சுமார் 06 வாரங்கள் வரையிலும் ஆகலாம் எனவும் தெரிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
